சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில் ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம் பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப் பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே