சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண் பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என் துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான் இன்பமெலாம் தந்தான் இசைந்து