சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய் மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில் விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம் பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும் பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால் மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே