சேவி யாதஎன் பிழைகளை என்னுறே சிறிதறி தரும்போதோ பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன் ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே