சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித் துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம் கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய் தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே