சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித் தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப் பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும் தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச் சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே