சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில் சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக் கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச் செல்அ வாவிய பொழில்திரு வொற்றித் தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும் நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை நமச்சி வாயத்தை நான்மற வேனே