சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே தூயவனே நேயவனே சோதிஉரு வவனே நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம் வல்லவனே சிவகாம வல்லிமண வாளா மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே