சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம் சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக் கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங் கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே