சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார் நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே
சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும் செல்வம் கொடுத்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி