சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந் தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக் கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே