சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார் சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான் தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல் ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ