சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப் படுவாரைத் துணிந்து கொல்லக் கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற துண்மையினில் கொண்டு நீவீர் நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார் போலும்அன்றி நினைத்த வாங்கே பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா பதிப்புகழைப் பேசு வீரே