சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்