ஞானஆ னந்த வல்லியாம் பிரியா நாயகி யுடன்எழுந் தருளி ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே இன்னமு தனைத்தையும் அருத்தி ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில் உறப்புரிந் தெனைப்பிரி யாமல் வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க மாமணி மன்றில்எந் தாயே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அபயத் திறன் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்