ஞானமும் அதனால் அடைஅனு பவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள் இந்தநாள் அடியனேன் இங்கே ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும் ஏனென வினவா திருத்தலும் அழகோ இறையும்நான் தரிக்கலன் இனியே