ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன் வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே