பாடல் எண் :1084
ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
போல என்றுரை யாஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
பாடல் எண் :1766
ஞால ராதி வணங்குமொற்றி
நாதர் நீரே நாட்டமுறும்
பால ராமென் றுரைத்தேனாம்
பால ரலநீ பாரென்றார்
மேல ராவந் திடுமென்றேன்
விளம்பேல் மகவு மறியுமென்றார்
கோல ராமென் றுரைத்தேன்யாங்
கொண்டோ முக்க ணென்றாரே
பாடல் எண் :1856
ஞால நிகழும் புகழொற்றி
நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
பால ரலவோ வென்றேனைம்
பாலர் பாலைப் பருவத்திற்
சால மயல்கொண் டிடவருமோர்
தனிமைப் பால ரியாமென்றே
யேல முறுவல் புரிகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.