ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால் சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத் தாவி நான்பெரும் பாவி ஆயினன் ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ