ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன் நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக் காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச் சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன் ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே