ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற காலமே காலமெலாம் கடந்த ஞானக் கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற் கோலமே குணமேஉட் குறியே கோலங் குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் சீலமே மாலறியா மனத்திற் கண்ட செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே