ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய் நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய் காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக் கோலம் செய்அருள் சண்முக சிவஓம் குழக வோஎனக் கூவிநம் துயராம் ஆலம் சொல்லுதம் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே