ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண் நாயகனே வடிவேற்கை நாத னேநான் கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன் குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச் சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச் சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச் சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே