தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும் பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன் குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே