தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந் தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள் கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக் கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன் இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே