தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள் வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து வருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி எஞ்சலிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந் தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய் விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும் மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே