தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும் தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன் விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர் அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே