தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய் கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே