தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி நவில்பர சிவம்எனும் இவர்கள் இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின் கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே