தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே