தணிகை மேவிய சாமி யேநினை எணிகை விட்டிடேல் என்று தோத்திரம் அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண் கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே
தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே