தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி