தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே சத்திய சாத்தியக் கனலே ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே உலகெலாந் தழைக்கமெய் உளத்தே நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே நல்கிய ஞானபோ னகமே புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொதுநடம் புரிகின்ற பொருளே