தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார் பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாயில் மீதில் கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம் கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே