தத்து மத்திடைத் தயிரென வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன் புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே