தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என் றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே