தத்துவமே தத்துவா தீத மேசிற் சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச் சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம் சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும் சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே