தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன் சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன் அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன் சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே