தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும் சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே