தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில் சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால் வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அபயம் இடுதல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்