தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும் தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார் என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே