தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய் தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய் சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம் அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா வீறுமவர்() திருமேனி நானும்என அறியே ( ) ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொசு, பி இரா, ச மு க