தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ தமியனேன் தளர்ந்துளங் கலங்கி எந்தையே குருவே இறைவனே முறையோ என்றுநின் றோலிடு கின்றேன் சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல் சிறியனேன் என்செய்கேன் ஐயோ சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே