தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச் சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும் எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்