தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும்நீ என்றே சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல் நீதியோ நின்அருட் கழகோ