தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர் அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே