தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும் சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே வளமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே