தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில் கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே