பாடல் எண் :5816
தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே()
() இத்திருப்பாட்டின் இறுதியில் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகள்
எழுதியருளியுள்ளதாக ஆபா குறிப்பிட்டுள்ளார்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.