தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால் இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி